கள்ளச்சாராய விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
கள்ளச்சாராய விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
ADDED : ஜூன் 25, 2024 03:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று(ஜூன் 25) கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.