தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கருங்கல் குவாரிகளில் கண்காணிப்பு கேமரா

கருங்கல் குவாரிகளில் கண்காணிப்பு கேமரா

கருங்கல் குவாரிகளில் கண்காணிப்பு கேமரா


UPDATED : அக் 13, 2026 06:53 PM

ADDED : அக் 13, 2026 06:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:53 PM ADDED : அக் 13, 2026 06:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் கருங்கல், கிராவல் மண் குவாரிகள் மற்றும் அவற்றைய ஒட்டிய எடை மேடை பகுதிகளை கண்காணிப்பதற்கான வசதி எற்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து, கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் கருங்கல், கிராவல் குவாரிகளில், அதிக அளவு முறைகேடுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவாரிகளில் அனுமதி சீட்டு வழங்குவதில் போலி ஆவணங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதற்கு அடுத்தபடியாக, குவாரிகளில் தினமும் எத்தனை லாரிகள் வருகின்றன; அதில் ஒவ்வொரு முறையும் எவ்வளவு பொருட்கள் ஏற்றப்படுகின்றன என்பதை, நேரலை முறையில் கண்காணிக்க, அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

குவாரிகள், அருகில் உள்ள எடை மேடைகள் ஆகியவற்றில், லாரிகள் வந்து செல்வதை நேரலை முறையில் கண்காணிக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளுக்கு, 2 கோடி ரூபாயை ஒதுக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us