உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 17, 2026 03:04 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'ஆவணி மாத கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு, இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் அனுமதிக்கப்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
ஆவணி மாத கடைசி முகூர்த்த நாளான இன்று, அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது .
இதைக் கருத்தில் வைத்து, சார்- பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்க, பதிவுத்துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, வழக்கமாக, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில், இன்று, 300 டோக்கன்கள் வழங்கப்படும். வழக்கமாக, 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில் இன்று, 150 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் என, பதிவுத்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
