sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்கழி வழிபாடு-03

/

மார்கழி வழிபாடு-03

மார்கழி வழிபாடு-03

மார்கழி வழிபாடு-03


ADDED : டிச 17, 2024 07:31 PM

Google News

ADDED : டிச 17, 2024 07:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை - பாடல் 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

திருவெம்பாவை - பாடல் 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தென்அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமேசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனைஇத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.

துாங்கிக் கொண்டிருந்த தோழி, ''ஏதோ தெரியாத்தனமாக துாங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே!'' என வருந்திச் சொல்கிறாள். வந்த தோழியர் அவளிடம், ''அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது துாய்மையான அன்பென்பதும், துாய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப் படுத்துகிறோம்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us