ADDED : ஜூன் 19, 2026 02:01 AM
சென்னை: 'கொசு தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால், 48 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
பருவமழை காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, கொசுக்களின் உற்பத்தி இடங்களை கண்டறிந்து, நோய் பரவலை தடுப்பது குறித்து, மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசிக்கப்பட்டு ள்ளது.
கொசுப்புழு உற்பத்தியை தடுக்க மருந்து தெளித்தல் உள்ளிட்ட, ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்க வேண்டும்.
கொசு தொல்லை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகாருக்கும், 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
