ADDED : டிச 05, 2024 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே குச்சம்பட்டி ஆனந்தஜோதி, 33; திருமணமானவர்; ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்தார்.
இருவரும் சேர்ந்து இருந்ததை பார்த்த அவரின், 5 வயது மகன், கணவரிடம் கூறி விடுவார் என பயந்து, 2020 ஜன., 10ல் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
விசாரித்த மதுரை, 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய், அந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.