ADDED : ஜன 10, 2024 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று விட்டு, நீலகிரி எம்.பி., ராஜா கேர்மாளம் வழியாக கடம்பூர் செல்ல காரில் வந்து கொண்டிருந்தார்.
கோட்டாடை பிரிவு அருகே வந்தபோது, வனப்பகுதியிலிருந்து குட்டியுடன் இரு யானைகள் எம்.பி.,யின் வாகனத்தை மறித்து சாலை நடுவில் நின்று கொண்டன.
போலீஸ் வாகனத்தின் சைரன் அடித்த பின், மெதுவாக நகர்ந்து சாலையோரம் சென்றன. சிறிது நேரம் கழித்து வாகனங்களை எடுத்துச் சென்றனர்.