முண்டியம்பாக்கம் – பஞ்சாப் பார்சல் ரயில் சேவை தொடக்கம்
முண்டியம்பாக்கம் – பஞ்சாப் பார்சல் ரயில் சேவை தொடக்கம்
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:07 PM
சென்னை: விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் இருந்து, பஞ்சாப் மாநிலம் சாஹ்னேவாலுக்கு, முதல் முறையாக, பார்சல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் கட்டண உயர்வின்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க, பார்சல் ரயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது, நடுத்தரமான ரயில் நிலையங்களில், பார்சல் மையங்கள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டம் சார்பில், முண்டியம்பாக்கத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் சாஹ்னேவாலுக்கு, முதல் பார்சல் ரயில் சேவை, கடந்த 3ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பார்சல் ரயிலை இயக்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வரும் 2032 அக்.,2ம் தேதி வரை, தேவைக்கு ஏற்ப, இந்த பார்சல் ரயில் இயக்கப்படும். முதல் ரயிலில், ஆடைகள், ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உட்பட, 268 டன் வணிகப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன என, சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.
