தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்; இ.பி.எஸ்., காட்டம்

தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்; இ.பி.எஸ்., காட்டம்

தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்; இ.பி.எஸ்., காட்டம்


ADDED : நவ 20, 2024 01:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 01:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு டாக்டர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். ஆசிரியர் ரமணி கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us