UPDATED : அக் 07, 2026 09:40 PM
ADDED : அக் 06, 2026 05:36 PM
நாகப்பட்டினம்: நாகையில், கூலித் தொழிலாளி மர்மமாக இறந்த சம்பவத்தில், கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம், செம்பியன்மகாதேவியை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. கூலித் தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் சோழபாண்டி, அரவிந்த் ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு, மது அருந்த சென்றுள்ளார். மறுநாள் காலை வரை வீடு திரும்பாததால், குடும்பத்தினர் செந்தில்குமார் நண்பர்களிடம் விசாரித்தப்போது, இரவே செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர்.
வீடு திரும்பாததால் அப்பகுதியினர் செந்தில்குமாரை தேடியுள்ளனர். கிராமத்திற்கு அருகே நண்பர்கள் மது அருந்திய இடத்தருகே உள்ள வாய்க்காலில், முகத்தில் காயங்களுடன் செந்தில்குமார் சடலம் மீட்கப்பட்டது.
வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து, கொலையா அல்லது வாய்க்கால் மதகில் இருந்து தவறி விழுந்ததால், இறந்தாரா என விசாரித்து வருகின்றனர்.
