ADDED : ஏப் 17, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்டசபையில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த நான்காண்டுகளில், 98 முருகன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
பல்வேறு முருகன் கோவில்களில், முருகன் சிலை அமைக்க வேண்டும் என, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மருதமலை, ஈரோடு திண்டலில் முருகன் சிலைகள் அமைக்க, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.