வழக்கு பதிவு அதிகாரம் வேண்டும்: சிங்கப்பெண்கள் படை போர்க்கொடி
வழக்கு பதிவு அதிகாரம் வேண்டும்: சிங்கப்பெண்கள் படை போர்க்கொடி
UPDATED : அக் 02, 2026 04:28 AM
ADDED : அக் 02, 2026 04:27 AM

சென்னை: த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. இதற்கு, 354 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புகார்கள் பெற, '1091' என்ற எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டு, இவர்கள், மாநிலம் முழுதும், 270 குழுக்களாக பிரிந்து, ரோந்து மற்றும் குற்றத்தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உள்ளூர் போலீசார், சரியான ஒத்தழைப்பு அளிப்பது இல்லை என, கூறப்படுகிறது.
இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரே வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இப்படை அதிகாரிகள் கூறியதாவது:
சிங்கப்பெண்கள் படை போலீசாருக்கு உள்ளூர் போலீசாரால் போதிய ஒத்துழைப்பு தர முடியவில்லை; அவர்களுக்கு பணிச்சுமை அதிகம். நாங்கள் விசாரிக்கும் புகார்களும், பிடித்து கொடுக்கும் நபர்களையும் கைது செய்து வருகின்றனர். இப்பணிகளை நாங்களே கவனிக்கும் வகையில், அதிகாரம் வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்
