இனி 'சிக்ஸ்' அடிப்பதே என் வேலை அண்ணாமலை புது முடிவு
இனி 'சிக்ஸ்' அடிப்பதே என் வேலை அண்ணாமலை புது முடிவு
ADDED : ஏப் 13, 2025 03:00 AM
சென்னை: ''அரசியலில் இனி, 'சிக்ஸ்' அடிப்பது மட்டும்தான் என் வேலை,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
'தமிழ் ஜனம்' தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு விழா, சென்னை, ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது.
அதில் பங்கேற்று அண்ணாமலை பேசியதாவது:
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைகிற மாநிலம் தமிழகம் என, தமிழக அரசு விளம்பரம் செய்கிறது. தமிழகம் வளர்ந்தால் நமக்கு சந்தோஷம் தான். ஆனால் மற்ற, 27 மாநிலங்கள் இதுகுறித்த தகவலை வெளியிடாத நிலையில், 'நாங்கள்தான் முதல் இடம்' என, தமிழக அரசு எப்படி கூற முடியும்?
எனக்கு, இவ்வளவு நாள் பொறுப்பு எனும் கட்டுப்பாடு இருந்தது; இனி சுதந்திரமாக பேசலாம். அரசியல் பேச முடியும்; செய்ய முடியும். அரசியல்வாதிக்கு, அடித்து ஆடக்கூடிய, 'பாக்ஸிங்' கலை தேவைப்படுகிறது. அதனால், பேசும் ஸ்டைலை இனிமேல் மாற்றியாக வேண்டும்.
பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் இருக்கிறார். நம் பந்தை மட்டும், நாம் அடித்தால் போதும். 'பவுன்சர், டிபென்ஸ்' பந்துகளை, நயினார் நாகேந்திரன் பார்த்துக் கொள்வார். இனி, 'சிக்ஸ்' அடிப்பது மட்டும்தான் என் ஒரே வேலை.
இவ்வாறு அவர் பேசினார்.