எனது மொபைல் போனை 20 ஆண்டுகளாக ஒட்டு கேட்கின்றனர்: சீமான் அதிர்ச்சி
எனது மொபைல் போனை 20 ஆண்டுகளாக ஒட்டு கேட்கின்றனர்: சீமான் அதிர்ச்சி
UPDATED : ஏப் 21, 2025 07:20 AM
ADDED : ஏப் 20, 2025 02:54 PM

சென்னை: ''இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் இல்லை. எது ஒன்றையும் பதிவு செய்வார்கள்'' என நயினார் நாகேந்திரன் போன் ஒட்டு கேட்ப விவகாரம் தொடர்பான நிருபர்கள் கேள்விக்கு சீமான் பதில் அளித்தார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: கூட்டாட்சி, கூட்டணி ஆட்சி எல்லாம் எங்களுக்கு வேண்டியது இல்லை. எங்களுக்கு தேவை நல்லாட்சி. நாட்டுக்கும், மக்களுக்கும் விரும்பிய ஆட்சி.
அ.தி.மு.க., கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்துகின்றனர். தேர்தல் வரும்போது இது போன்ற நாடகங்களை பார்த்து தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் அனைத்தும் நீதிமன்றம் மூலம் தான் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மொபைல் போன் ஒட்டு கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளாரே?
சீமான் பதில்: இன்றைக்கு தான் நயினார் நாகேந்திரன் பார்க்கிறார் போல, எனது மொபைல் போனை 20 வருடமாக கேட்கிறார்கள். இந்திய அளவில் ஒட்டு கேட்கப்படும் 50 தலைவர்களில் நான் ஒருவனாக இருந்தேன். தமிழகத்தில் என்னுடையது எல்லாம் ரொம்ப நாளாக ஒட்டு கேட்கப்படுகிறது. இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் இல்லை. எது ஒன்றையும் பதிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

