UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:08 PM
–நமது நிருபர்–: வர உள்ள பண்டிகை காலத்தை முன்னிட்டு, மைசூரு – ராமேஸ்வரம் இடையே வார சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி இன்று முதல், நவ., 30 வரை, திங்கள்தோறும் மாலை, 6:35 மணிக்கு, மைசூரில் புறப்படும் ரயில், மறுநாள் காலை, 11:00 மணிக்கு ராமேஸ்வரத்தை அடைகிறது. இது செவ்வாய் அதிகாலை, 3:20க்கு சேலம், 4:29க்கு நாமக்கல், 5:18க்கு கரூரில் நின்று செல்கிறது.
மறுமார்க்க ரயில் நாளை முதல், டிச., 1 வரை, செவ்வாய்தோறும் மதியம், 3:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை, 7:45 மணிக்கு மைசூருவை அடைகிறது. இது செவ்வாய் இரவு, 8:08க்கு கரூர், 8:44க்கு நாமக்கல், 9:45க்கு சேலத்தில் நின்று செல்லும். மேலும் மாண்டியா, ராமநகரம், கெங்கேரி, கே.எஸ்.ஆர்., பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
