sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தமிழகம் கேட்ட ரூ.2,000 கோடி; 'நபார்டு' வங்கி கைவிரிப்பு

/

 தமிழகம் கேட்ட ரூ.2,000 கோடி; 'நபார்டு' வங்கி கைவிரிப்பு

 தமிழகம் கேட்ட ரூ.2,000 கோடி; 'நபார்டு' வங்கி கைவிரிப்பு

 தமிழகம் கேட்ட ரூ.2,000 கோடி; 'நபார்டு' வங்கி கைவிரிப்பு

3


ADDED : ஜன 14, 2026 03:24 AM

Google News

ADDED : ஜன 14, 2026 03:24 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2,000 கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக கூட்டுறவு துறை விடுத்த கோரிக்கையை, 'நபார்டு' நிராகரித்து விட்டது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு மக்களிடம் இருந்து திரட்டப்படும் 'டிபாசிட்' தொகை மற்றும் நபார்டு வங்கியிடம் இருந்து வாங்கப்படும் கடனில் இருந்து, இதற்கு நிதி ஒதுக்கப் படுகிறது.

அதன்படி, மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர் கடன் வழங்க, நபார்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இது தவிர, சொந்த நிதியில் இருந்தும் நபார்டு கடன் தருகிறது. இதற்கு, 7 சதவீதம் வட்டி. இதனால், மத்திய அரசு தரும் நிதியில் இருந்து, குறைந்த வட்டியில் கடன் வாங்கவே, கூட்டுறவு வங்கிகள் விரும்புகின்றன.

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், 17,000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதனால், 50 சதவீத நிதியை கடனாக, குறைந்த வட்டியில் வழங்குமாறு, நபார்டு வங்கியிடம், கடந்த ஆண்டின் துவக்கத்தில் கூட்டுறவு துறை கேட்டது. அதில், 3,800 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும், 2,000 கோடி ரூபாய் கடன் வழங்குமாறு நபார்டு வங்கியிடம், கூட்டுறவு துறை கேட்டது. இந்த கடனை வழங்க, நபார்டு வங்கி கைவிரித்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


கூடுதலாக கேட்கப்பட்ட கடன் தொகையை, அதிக வட்டி பிரிவில் வழங்குவதாகவும், குறைந்த வட்டி கடனை இனி அடுத்த நிதியாண்டில் பார்த்துக் கொள்ளலாம் என்றும், நபார்டு தரப்பில் கூறப்பட்டு விட்டது.

வட்டி செலவு எனவே, அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை விட, மக்களிடம் இருந்து திரட்டப்படும் டிபாசிட் தொகையில் இருந்து பயிர் கடன் தொடர்ந்து வழங்கப்படும். இதனால், வட்டி செலவை மிச்சப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, நபார்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு குறைந்த வட் டியில் வழங்கப்படும் கட னுக்கான நிதியை, மத்திய அரசு குறைத்து விட்டது. எனவே, அதற்கு ஏற்ப, மாநில கூட்டுறவு வங்கி களுக்கும் குறைந்த வட்டி கடன் குறைவாக வழங்கப்படுகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us