sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத இண்டி கூட்டணி; அண்ணாமலைக்கு நயினார் ஆதரவு

/

இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத இண்டி கூட்டணி; அண்ணாமலைக்கு நயினார் ஆதரவு

இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத இண்டி கூட்டணி; அண்ணாமலைக்கு நயினார் ஆதரவு

இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத இண்டி கூட்டணி; அண்ணாமலைக்கு நயினார் ஆதரவு

4


ADDED : ஜன 12, 2026 08:21 PM

Google News

ADDED : ஜன 12, 2026 08:21 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத இண்டி கூட்டணி என்று அண்ணாமலைக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான சகோதரர் அண்ணாமலை குறித்து மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கொச்சையாக விமர்சனம் செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

அதுமட்டுமல்லாது, மலினமான வார்த்தைகளைப் பிரயோகித்து, ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இழிவுபடுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வட மாநிலத்தவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசி திமுக தலைவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இனவெறித்தீ, இன்று அவர்களது இண்டி கூட்டணியினராலேயே தமிழர்களை நோக்கித் திரும்பியிருக்கிறது.

'தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்' என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின் தற்போது தமிழர்களின் மாண்பைக் காக்க, இண்டி கூட்டணியினரை எதிர்த்துக் குரல் கொடுக்கப் போகிறாரா அல்லது மௌனம் சாதிக்கப் போகிறாரா?

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us