ADDED : அக் 11, 2025 07:37 AM

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. எனவே, பா.ஜ.,வில் தேர்தல் பணிகளை முடுக்கி விடவும், மக்களை சந்திக்கவும், மாநில தலைவர் நாகேந்திரன் நாளை முதல், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்கிறார். இதன் துவக்க விழா பொதுக் கூட்டம், மதுரை மாவட்டம் அண்ணா நகரில் நாளை மாலை நடக்கிறது.
இதில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அடுத்த நாள் மாலை சிவகங்கை, 14ல் செங்கல்பட்டு என, ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில், கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் நாகேந்திரன் சந்திக்க உள்ளார். அவரின் சுற்றுப் பயணத்திற்கு, 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என பெயரிடப்பட்டு உள்ளது.
ரோடு ஷோவுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், நாகேந்திரனின் சுற்றுப்பயணத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்தி, அதன் வாயிலாக கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் நாகேந்திரன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.