ADDED : அக் 17, 2025 02:17 AM

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, 100, கடந்த ஆக., 22ல், வீட்டில் தவறி விழுந்தததால், தலையில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின், 24ம் தேதி உணவு அருந்தும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்றார். அதன்பின், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அக்., 10ல் வீடு திரும்பினார்.
உணவு விழுங்குவதில் சிரமம் இருப்பதால், ஊட்டச்சத்து உணவை நேரடியாக இரைப்பைக்குள் செலுத்தும் வகையில், தொண்டையில் 'டியூப்' பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், துாக்கத்தில் தவறுதலாக, அந்த டியூபை நல்லகண்ணு எடுத்துள்ளார்.
இதனால், மீண்டும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மறுபடியும் டியூப் பொருத்தப்பட்டது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவர், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.