தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர் மாற்றம்

 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர் மாற்றம்

 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர் மாற்றம்


ADDED : ஜூன் 18, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., அரசால் தொடங்கப்பட்ட, 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர், 'திறன் தமிழ்நாடு' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியில், 2022ல், 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அரசு பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்ப்பது. தற்போதைய உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயிற்சி அளிப்பது போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.

தற்போது அமைந்துள்ள புது அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் அதிகாரப்பூர்வ, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் உள்ள பெயரை, 'திறன் தமிழ்நாடு கார்ப்பரேஷன்' என, மாற்றியுள்ளது. அதோடு, மே 15ம் தேதிக்கு முந்தைய அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us