கோழி பண்ணை வரலாற்றில் முதல்முறை: முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு
கோழி பண்ணை வரலாற்றில் முதல்முறை: முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு
ADDED : டிச 22, 2025 08:21 PM

சென்னை: நாமக்கல் மண்டலத்தில் கோழி பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நாள்தோறும் 7 கோடிக்கும் அதிகமான முட்டைக்கோழிகள் வளர்க்கப்பட்டு 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அண்மைக்காலமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கூடிய நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் முட்டை கொள்முதல் விலையானது ரூ.6.40 காசுகளாக அதிகரித்துள்ளது. இது நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. கொள்முதல் அதிகரிப்பால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

