தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆதாரில் பெயர் மாற்ற ஆவணங்கள் அவசியம்

ஆதாரில் பெயர் மாற்ற ஆவணங்கள் அவசியம்

ஆதாரில் பெயர் மாற்ற ஆவணங்கள் அவசியம்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 06:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 06:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்’ என, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தனித்துவ அடையாள ஆணையம் அளித்துள்ள விளக்கம்:

ஆதாரை முறைகேடாக பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளை தடுக்க, ஆவண சரி பார்ப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம். அதன்படி, தலைப்பெழுத்தை விரிவாக்கம் செய்வது, பெயரின் நடுப்பகுதியை அல்லது குடும்ப பெயரை சேர்ப்பது அல்லது நீக்குவது, புள்ளிகளை சேர்ப்பது அல்லது நீக்குவது உள்ளிட்ட சிறிய மாற்றங்களுக்கு, சரியான பெயர் உள்ள, அடையாள சான்றை அனுப்ப வேண்டும்.

ஆதார் விண்ணப்பப் பதிவின்போது, அலுவலர்களின் தட்டச்சு பிழையால் ஏற்பட்ட தவறுகளை சரி செய்ய, பெரியவர்களுக்கு, ‘பி’ படிவத்துடன் கூடிய பிரமானப்பத்திரம், அடையாளச்சான்று, அல்லது உறவுச்சான்று, சிறுவர்களுக்கு, பெற்றோர், காப்பாளர்கள் படிவத்துடன், பிரமாண பத்திரம், உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

திருமணத்துக்கு பின், தலைப்பெழுத்தை மாற்ற, அடையாளச்சான்று, பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழ், விவாகரத்து பெற்றோர் விரும்பினால், ‘டி’ பிரமாணப் பத்திரத்தை சேர்க்க வேண்டும். முழுமையாக பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர், இந்திய அரசிடம் வாங்கிய, அரசிதழ் அறிவிப்பை இணைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us