ADDED : நவ 11, 2025 05:48 AM

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலம் நான்தேத்தில் இருந்து, தமிழகம் வழியாக கேரளா மாநிலம் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
மஹாராஷ்டிரா மாநிலம், நான்தேத்தில் இருந்து, வரும் 20 முதல், ஜன., 15 வரை வியாழக்கிழமைகளில் காலை 10:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் அதிகாலை 3:00 மணிக்கு கொல்லம் செல்லும்
கொல்லத்தில் இருந்து, வரும் 22 முதல், ஜன., 17ம் தேதி வரை, சனிக்கிழமைகளில் அதிகாலை 5:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 9:30 மணிக்கு நான்தேத் செல்லும். காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை வழியாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது
தெலுங்கானா மாநிலம், சார்லபள்ளி - கொல்லத்துக்கு, வரும் 18 முதல் ஜன., 13ம் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

