ADDED : மார் 05, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, இரண்டு மாதங்களில், 470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து, 1,914 கிலோ கஞ்சா உட்பட, 24 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்து, 25 பேர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ளனர். ஆறு பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என, டி.ஜி.பி., அலுவலகம், செய்திக்குறப்பில் தெரிவித்துள்ளது.

