இசையமைப்பில் தேசிய விருது: 7வது முறையாக பெறுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பில் தேசிய விருது: 7வது முறையாக பெறுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
UPDATED : ஆக 17, 2024 11:12 AM
ADDED : ஆக 16, 2024 07:23 PM

சென்னை: பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கப்படுகிறது. இது இவர் பெறும் 7வது தேசிய விருது.
புதுடில்லியில் 2022-ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் -1, சிறந்த தமிழ் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை என நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது பெறுகிறார்.
இதற்கு முன்பு முதல் முறையாக அவர் அறிமுகமான 'ரோஜா' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். அதற்கடுத்து 'மின்சார கனவு, லகான் (ஹிந்தி), கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை' ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.
2010ம் ஆண்டு முதல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகள் “சிறந்த பாடல்களுக்காக, சிறந்த பின்னணி இசைக்காக” என பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பின் ஏஆர் ரஹ்மான் 'மாம்' ஹிந்திப் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும், தற்போது 'பொன்னியின் செல்வன் 1' படத்திற்காக மீண்டும் அதே விருதையும் பெற்றுள்ளார்.