ADDED : ஜூலை 26, 2025 11:27 PM

சென்னை:தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர்கள் சங்கம், அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைஷிக் மகாசங்கம் மற்றும் செ ன்னை வி.ஐ.டி., இணைந்து நடத்தும், 'விக் ஷித் பாரத் நோக்கிய செயல் திட்டம் - ஒரு பல்துறை அணுகுமுறை' என்ற தலைப்பிலான, இரண்டு நாள் தேசிய மாநாடு சென்னை வி.ஐ.டி., பல்கலையில் துவங்கியது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சுதான்ஷு திரிவேதி மாநாட்டை துவக்கி வைத்தார். வி.ஐ.டி., பல்கலை வே ந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார்.
பல்கலையின் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். நாடு முழுதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைத்து பகுதிகளையும், அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.
இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தீர்க்கப்பட வேண்டும். தனிநபர் வருமானத்தை அதிகரிப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
நாட்டின் பட்ஜெட்டில், 2 சதவீதம் மட்டுமே கல்விக்காக செலவிடப்படுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக முதலீடு செய்வது, நாட்டின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீதாராம், அகில இந்திய இணை அமைப்பு செயலர் குந்தா லட்சுமண், வி.ஐ.டி., பல்கலை இணை துணைவேந்தர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டாவது நாளாக இன்றும் மாநாடு நடக்கிறது.