ADDED : அக் 14, 2024 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுவதற்காக ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில், 30 பேர் கொண்ட 10 குழுவினர் அதிநவீன மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள், மருத்துவ முதலுதவி கருவிகளுடன் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு வளாகத்தில், 24 மணி நேர அவசர கட்டுபாட்டு மையம் செயல்படுகிறது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளனர்.