ADDED : அக் 26, 2026 10:05 PM
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகே, தமிழகம் உட்பட, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் வெற்றி பெற்றால், எஸ்.ஐ.ஆரை ஆதரிப்பர்; இல்லாவிட்டால் எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பர். எப்போதெல்லாம் பிரதமர் மோடி விமர்சிக்கப்படுகிறாரோ, அப்போதெல்லாம, பா.ஜ., வெற்றி பெறுகிறது.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.,வை எதிர்க்கிறோம் என சொல்லிக்கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு தி.மு.க., அநீதி இழைத்தது. இவ்வளவு தவறையும் செய்து விட்டு, தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்; மும்மொழியை எதிர்க்கிறோம் என்று கூறி, ஊழல் செய்துள்ளனர்.
யார் தவறு செய்தாலும், அவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதை, முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது உணர்த்துகிறது.
– தமிழிசை
பா.ஜ., மூத்த தலைவர்
