மா.கம்யூ., தலைமை அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி
மா.கம்யூ., தலைமை அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி
UPDATED : ஆக 15, 2025 08:47 PM
ADDED : ஆக 15, 2025 08:41 PM

சென்னை: சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில், தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை தி.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு நடந்த சுதந்திர தின விழாவில், கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினார். கொடிக்கு வணக்கம் செலுத்த, கொடியை பார்த்தவர்கள், தலைகீழாக பறப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, தேசியக் கொடி, கீழே இறக்கப்பட்டு, சரியாக பறக்க விடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தலைமை அலுவலகத்திலேயே, தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பேசுபொருளாக மாறி உள்ளது. சமூக வலைதளங்களில் பலரும், தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றில் சில கருத்துகள்:
* கம்யூனிஸ்ட் கொள்கைக்கு விரோதமாகவும், மக்களுக்கு விரோதமாகவும் தமிழகத்தில் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த லட்சணத்தில், இவர்களின் நாட்டுப்பற்று இருக்கிறது.
* தேசியக் கொடியை எப்படி, இவங்க கரெக்டா ஏத்துவாங்க? உண்டியலை கையில் பிடிக்க சொல்லி இருந்தா கரெக்டாக பிடிச்சிருப்பாங்க.
* இவர்கள் இந்தியர்கள் அல்ல. சீன கைக்கூலிகள்; தி.மு.க.,வின் கொத்தடிமைகள். இப்படி தான் இருப்பர். இவர்களுக்கும் சுதந்திரத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
* வெளிநாட்டு கொள்கையை பின்பற்றுவோருக்கு, இந்திய தேசியக் கொடியின் அமைப்பு எப்படி தெரியும்?
இது போன்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.