தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் 2 பேர் தேர்வு
தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் 2 பேர் தேர்வு
ADDED : ஆக 28, 2024 06:06 AM

சென்னை : மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த இருவர் தேர்வாகி உள்ளனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசு, நாட்டின் சிறந்த 50 ஆசிரியர்களை தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்குகிறது.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம், இந்த ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான, 50 ஆசிரியர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில், தமிழகத்தின் வேலுார் மாவட்டம், ராஜகுப்பம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத்; மதுரை டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு செப்டம்பர், 5ல், டில்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்; 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு, வெள்ளி பதக்கம் மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும்.