ADDED : பிப் 04, 2025 11:49 PM
சென்னை:அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை தாவரங்களை காக்க, 'பூர்வீக இன விதை பெட்டகம்' அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அலங்காரத்திற்காக கொண்டு வரப்படும் தாவரங்கள், அபரிமிதமாக வளர்ந்து விடுகின்றன.
அதனால் பாரம்பரியமாக வளர்ந்து வந்த அரிய வகை தாவர இனங்கள், அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதை தடுக்க, கோவையில் உள்ள தமிழக வன உயர் பயிற்சியக மரபியல் பிரிவில், பாரம்பரிய தாவரங்களின் பூர்வீக இன விதை பெட்டகம், 10 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என, தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது.
அதன்படி, கோவை வேளாண் பல்கலையுடன் இணைந்து, 'கிரயோஜெனிக்' குளிர்சாதன வசதியுடன் இந்த பெட்டகம் அமைக்க, முதற்கட்டமாக, 10.50 லட்சம் ரூபாயை விடுவித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.