ரூ.25 கோடி மதிப்பிலான நவபாஷாண முருகர் சிலை பறிமுதல்; தி.மலையில் இருவர் கைது
ரூ.25 கோடி மதிப்பிலான நவபாஷாண முருகர் சிலை பறிமுதல்; தி.மலையில் இருவர் கைது
ADDED : டிச 22, 2024 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்பிலான நவபாஷாண முருகர் சிலையை விற்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் நவபாஷாண முருகர் சிலையை விற்க முயன்ற வெங்கடேசன் மற்றும் ராஜசேகர் ஆகியோரை மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நவபாஷாண முருகர் சிலை 10 கிலோ எடை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு ரூ.25 கோடி என்றும் கூறப்படுகிறது.
இதேபோல, ரூ. 35 லட்சம் மதிப்புடைய ஒரு அடி உயரம் கொண்ட யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்