ADDED : செப் 23, 2011 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை : செப்.,28 முதல் அக்.,6 வரை நவராத்திரி விழா நடக்கிறது.
இந்நாட்களிலும், அக்., 11 சாந்தாபிஷேகம் நடக்கும் தினத்தன்றும் கோயில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ அம்மனுக்கு தங்ககவசம், வைரக் கிரீடம், உபய திருக்கல்யாணம், தங்கரத உலா செய்யப்பட மாட்டாது. நவராத்திரி விழாவின் போது தினமும் மாலை 6 மணி முதல் அம்மன் மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம் இரவு 8.30 மணி வரை நடக்கும். அப்@பாது தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் நடத்தப்படமாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும், என தெரிவித்துள்ளார்.