sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை

/

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை


ADDED : பிப் 05, 2026 11:17 AM

Google News

ADDED : பிப் 05, 2026 11:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட் ஒருவர் சுட்டுக்கொல்லப்படார். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியை மத்திய அரசு காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதனால் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வேகமெடுத்து உள்ளது. இந்நிலையில், பிஜாப்பூரில் நக்சலைட்டுகள் பதுங்கிய இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: இடைவிட்டு நடைபெறும் துப்பாக்கிச் சண்டை இன்னும் தொடர்கிறது. இதுவரை, ஒரு நக்சலைட்டின் உடல், ஒரு ஏகே-47 துப்பாக்கியுடன் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முடிந்ததும் மேலும் விவரங்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்தாண்டில் இதுவரை நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின் எதிரொலியாக நக்சலைட்டுகள் 23 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பிஜாப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களைக் கொண்ட பஸ்தர் பிராந்தியத்தில் ஜனவரி 3ம் தேதி நடந்த என்கவுண்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு, சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 285 பேர் கொல்லப்பட்டனர்.






      Dinamalar
      Follow us