சிபிஎஸ்இ மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடம்; என்சிஇஆர்டி அறிமுகம்
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடம்; என்சிஇஆர்டி அறிமுகம்
ADDED : அக் 24, 2026 08:54 PM

சென்னை: சிபிஎஸ்இ 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு, கணிப்பீட்டு சிந்தனை பாடத்தொகுப்பு போன்றவற்றை, என்சிஇஆர்டி அறிமுகம் செய்துள்ளது.
என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய கல்வித்துறையின் கீழ் இயங்கும், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கான, கணிப்பீட்டு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத் தொகுப்பை உருவாக்கி உள்ளது.
ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ளாத மாணவர்களுக்கு, இந்த தொகுப்பு பாடங்கள் உதவியாக இருக்கும். பாடத்தொகுப்பில், டிஜிட்டல் பாதுகாப்பு, தரவு, தனியுரிமை போன்றவற்றுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவு எப்படி செயல்படுகிறது, அதன் பயன் என்ன, அதன் வரம்புகள், அவற்றை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
