sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தொடரும் பாலியல் வன்கொடுமைகள் வரும் 17ல் தே.ஜ., கூட்டணி ஆர்ப்பாட்டம்

/

 தொடரும் பாலியல் வன்கொடுமைகள் வரும் 17ல் தே.ஜ., கூட்டணி ஆர்ப்பாட்டம்

 தொடரும் பாலியல் வன்கொடுமைகள் வரும் 17ல் தே.ஜ., கூட்டணி ஆர்ப்பாட்டம்

 தொடரும் பாலியல் வன்கொடுமைகள் வரும் 17ல் தே.ஜ., கூட்டணி ஆர்ப்பாட்டம்

6


UPDATED : மார் 13, 2026 02:45 AM

ADDED : மார் 13, 2026 02:27 AM

Google News

6

UPDATED : மார் 13, 2026 02:45 AM ADDED : மார் 13, 2026 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''பாலியல் வன்கொடு மைகளை தடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், வரும் 17ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க., அரசு பதவியேற்றது முதல், தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தனியாக வசிக்கும் முதியோரை குறி வைத்து தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோதச் செயல்கள் அனைத்தையும், முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது.

எனவே, சட்டம் -- ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும், வரும் 17ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை முன்வைத்து, வரும் ௧௫ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தமிழக பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

புல் அவுட்: 15ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுத்து, பெண்களை பாதுகாக்க தவறிய தி.மு.க., அரசை கண்டிக்கும் வகையில், தமிழக பா.ஜ., சார்பில், வரும் 15ம் தேதி மாலை 4:00 மணிக்கு, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மாவட்டம்தோறும் நடைபெறும். - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,







      Dinamalar
      Follow us