sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேச வளர்ச்சியில் தலைமை பண்பு அவசியம்

/

தேச வளர்ச்சியில் தலைமை பண்பு அவசியம்

தேச வளர்ச்சியில் தலைமை பண்பு அவசியம்

தேச வளர்ச்சியில் தலைமை பண்பு அவசியம்


ADDED : செப் 08, 2011 05:33 PM

Google News

ADDED : செப் 08, 2011 05:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அமிர்தா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும்'சொசைட்டி ஆப் ஆட்டோமோடிவ் இன்ஜினியரிங் இந்தியா' சார்பில் கிளப் அலுவலர்களின் தலைமைப் பண்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

குளோபல் மார்கெட்டிங் தலைவர் அசிட் பர்மா துவக்கி வைத்து பேசியது: இயந்திரமயமாக்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் சர்வதேச சந்தையில், இந்தியா முதன்மையாக விளங்க உதவியாக அமையும். கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்தில் அபரிதமான வளர்ச்சியடைந்துள்ளது. வரும் 10 ஆண்டுகளில் தேசத்துக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை வளப்படுத்த வேண்டும். இக்காலகட்டத்தில், இந்திய பொருளாதாரம் மேம்பட்டு நான்காவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. விமானம் மற்றும் அதன் சாதனங்கள் கட்டமைக்கும் தொழில் கடந்த 2005ம் ஆண்டுக்கு பின் வளர்ச்சியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் தலைமை பண்பு. தேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் துறைகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி, தலைமை பண்பை மேம்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களின் தலைமைப் பண்பு இன்றியமையாத ஒன்று. இன்ஜினியரிங் துறை மாணவர்கள் தங்களின் தலைமைப் பண்பை மேம்படுத்த இப்பயிற்சி பயனுள்ளதாக அமையும், என்றார். போயிங் இந்தியா ஆர் அண்ட் டி இயக்குனர் பாலா பரத்வாஜ், கல்லூரி டீன் சந்திரசேகரன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவர் ரமேஷ் குமார் மற்றும் தென்னிந்தியாவிலுள்ள 59 இன்ஜினியரிங் கல்லூரிகளை சேர்ந்த 250 மாணவர்கள் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us