'ஹிந்துக்களுக்கு ஓரவஞ்சனை; முதல்வரிடம் நடுநிலை வேண்டும்'
'ஹிந்துக்களுக்கு ஓரவஞ்சனை; முதல்வரிடம் நடுநிலை வேண்டும்'
ADDED : டிச 30, 2024 06:31 AM

திருப்பூர்; ''ஹிந்துக்களுக்கு ஓரவஞ்சனையுடன் செயல்படாமல், முதல்வர் ஸ்டாலின், நடுநிலையுடன் செயல்பட வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின், சிறுபான்மையினர் மத தலைவர்களை சந்தித்தபோது, ஜெருசலேம் செல்லும் கிறிஸ்துவர்கள் ஒவ்வொருவருக்கும், 37,000 ரூபாய் நிதியுதவி; சர்ச், மசூதி, தர்கா பழுது பார்க்க நிதியுதவி அதிகரிப்பு போன்றவற்றை அறிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதற்கு அதிகமாகவே, சிறுபான்மையினருக்கும், அவர்களின் மத தலங்களுக்கும் மக்கள் வரிப்பணத்தை வாரி தந்துள்ளது தமிழக அரசு.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அறநிலையத் துறை அறிவித்த சில ஆன்மிக யாத்திரைகளை முறையாகச் செயல்படுத்தவில்லை. கிராம கோவில்கள் சீரமைப்புக்கான நிதி, கோவில் உண்டியல் நிதியிலிருந்து தான் ஒதுக்கப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில், கோவில்களை சீரமைக்க 1,000 கோடி ரூபாய் நிதி தருவதாக தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. அளிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆயிற்று?
ஹிந்துக்களுக்கோ, கோவில்களுக்கோ எதுவும் செய்யவில்லை. கோவில் இடங்களை சட்டவிரோதமாக அரசு துறைகள் விழுங்குவதற்கு, அற நிலையத் துறையே துணை போகிறது. இது கண்டனத்துக்குரியது. ஹிந்துக்களுக்கு ஓரவஞ்சனையின்றி, முதல்வர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

