ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நெல்லை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நெல்லை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
UPDATED : ஏப் 16, 2025 05:25 PM
ADDED : ஏப் 16, 2025 04:59 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் பில் கலெக்டர் காளி வசந்த் ( 27) ரூ.4000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பாலசிங்கம் பணியாற்றி வருகிறார். இவர், தந்தையின் பெயரில் உள்ள சொத்து வரியை தன் பெயரில் மாற்றுவதற்காக பில் கலெக்டர் காளி வசந்த்தை அணுகினார். இதற்கு காளி வசந்த் ரூ.4 ஆயிரம் லஞ்ம் கேட்டு உள்ளார்.
இதனை கொடுக்க விரும்பாத பாலசிங்கம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் லஞ்சப்பணத்தை பாலசிங்கத்திடம் இருந்து வாங்கிய காளி வசந்த்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.