நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சகோதரர் கைது
நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சகோதரர் கைது
ADDED : ஆக 13, 2025 05:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: நெல்லை ஆணவக் கொலை வழக்கில், கைதான சுர்ஜித்தின் சித்தி மகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த ஐ.டி., ஊழியர் கவின் 27, திருநெல்வேலியில் கடந்த 27ம் தேதி அவரது காதலியின் தம்பியால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சுர்ஜித், அவரது தந்தை எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டனர். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் 3வது குற்றவாளியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயகோபாலன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.