UPDATED : அக் 08, 2026 06:41 PM
ADDED : அக் 08, 2026 05:36 PM
நாகப்பட்டினம்: நாகையில், மனைவியை தாக்கிய போலீஸ் ஏட்டுவை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி, அண்ணா நகரை சேர்ந்தவர் ஜோதிமுருகன். கடந்த 2009 ம் ஆண்டு போலீஸ் பணிக்கு தேர்வாகி, தற்போது நாகை அடுத்த நாகூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன் மருத்துவ விடுப்பில் சென்றவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, மயிலாடுதுறையில் தனது தாய் வீட்டில் வசிக்கும் ஜோதிமுருகன் மனைவி லாவண்யா, 41, மருத்துவ செலவாக செய்த 9 லட்சம் ரூபாயை ஜோதிமுருகனிடம் திருப்பிக் கேட்டுள்ளார். நாகூருக்கு வருமாறு மனைவியை ஏட்டு அழைத்துள்ளார். நாகூருக்கு வந்த மனைவியை ஏட்டு கடுமையாக தாக்கி விட்டு தப்பியுள்ளார்.
லாவண்யா அளித்த புகாரின்பேரில் நாகூர் போலீசார் வழக்கு பதிந்து மனைவியை தாக்கி தலைமறைவான ஏட்டு ஜோதிமுருகனை தேடி வருகின்றனர்.
