ADDED : நவ 11, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை ; மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்கத்தின், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான இயக்குனராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர், சிவகங்கை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், நாமக்கல், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் தேனி மாவட்டங்களில், நேரு யுவகேந்திரா வாயிலாக இளைஞர்களை திரட்டி, துாய்மை பணிசெய்தவர்.
அத்துடன் மரம் நடுதல், போதை ஒழிப்பு உள்ளிட்ட பணிகளையும் செய்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அமைச்சர்களிடம் நற்சான்றிதழ் பெற்றவர்.