ADDED : செப் 04, 2024 11:42 AM
சென்னை: தொழிலாளர் நல நிதியை இணையதளம் வழியே செலுத்த, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், கடைகள் என, தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆண்டுதோறும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்.
தொழிலாளி பங்காக, 20 ரூபாய்; நிறுவன பங்காக, 40 ரூபாய் என, 60 ரூபாயை, தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
தற்போது தொழிலாளர் நல நிதியை, ஆன்லைனில் செலுத்த வசதியாக, lwmis.lwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில், வேலை அளிப்போர் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து, தொழிலாளர் நல நிதியை செலுத்தி, அதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய, கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி தெரிவித்துள்ளார்.