மொழிகள் குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய ஆய்வகம் திறப்பு
மொழிகள் குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய ஆய்வகம் திறப்பு
ADDED : நவ 15, 2025 11:48 PM
சென்னை: மொழிகளின் பன்முகத்தன்மை குறித்து ஆய்வு செய்திட, சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., யானது, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சார்ந்து, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள மொழிகளின் கலாசாரம் மற்றும் மரபுகளை பாதுகாத்திட, சென்னை ஐ.ஐ.டி.,யின் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறை சார்பில், புதிய ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே, மொழி குறித்த ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட முதல் ஆய்வகத்தை, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
மொழிகளின் பன்முகத்தன்மை, மனிதர்கள் மொழிகளை எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
மொழிகளுக்கான வளத்தை உருவாக்குவது, அதுசார்ந்த நடைமுறைகளை பயன்படுத்துவது தொடர்பாகவும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

