sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 புதிய மைசூர் சாண்டல் சோப்: அறிமுகம் செய்தார் தமன்னா

/

 புதிய மைசூர் சாண்டல் சோப்: அறிமுகம் செய்தார் தமன்னா

 புதிய மைசூர் சாண்டல் சோப்: அறிமுகம் செய்தார் தமன்னா

 புதிய மைசூர் சாண்டல் சோப்: அறிமுகம் செய்தார் தமன்னா


ADDED : பிப் 12, 2026 01:41 AM

Google News

ADDED : பிப் 12, 2026 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: புகழ்பெற்ற 'மைசூர் சாண்டல் சோப்' தயாரிப்பு நிறுவனத்தின், அதிகாரப்பூர்வ விளம்பரத் துாதரான, நடிகை தமன்னா, அதன் புதிய 57 தயாரிப்புகளை, அறிமுகம் செய்து வைத்தார்.

கர்நாடக 'சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட்' நிறுவனம் சார்பில், 'மைசூர் சாண்டல் சோப்' தயாரிக்கப்படுகிறது.

இதன் 108ம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்தது.

நவீன 'பேக்கேஜிங்' விழாவில், நடிகை தமன்னா, மைசூர் சாண்டலின் 57 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தார்.

இதில் மைசூர் சாண்டல் சோப் மட்டுமன்றி, சந்தனம், மல்லிகை வாசன சோப்புகள், வாசனை திரவியங்கள், பற்பசை மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை நவீன 'பேக்கேஜிங்'கில் வெளியிடப்பட்டன.

மேலும், தமன்னா நடித்துள்ள, புதிய விளம்பரங்கள் மற்றும் நிறுவனத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும், 'சுகந்த சிரி, அரோமாடிக் ஜர்னிஸ்' ஆகிய புத்தகங்களும், விழாவில் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில், கர்நாடக தொழில் துறை அமைச்சர் பாட்டீல் பேசியதாவது:

கே.எஸ்.டி.எல்., நிறுவனம், தற்போது மல்லிகை வாசனை சோப்புகள் மற்றும் நறுமணத் திரவியங்கள் துறையில் தடம் பதித்துள்ளன.

ஐரோப்பிய சந்தை களில், இதற்கான தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போது ஒரு சதவீதமாக உள்ள ஏற்றுமதியை அதிகரிக்க, விரிவான திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இந்நிறு வனத்தின் விற்பனை 2,000 கோடி ரூபாயை எட்டும். லாபம் 500 கோடி ரூபாயை கடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர் இந்நிகழ்வில், கே.எஸ்.டி.எல்., தலைவர் அப்பாஜி நாடகவுடா, நிர்வாக இயக்குநர் பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'மைசூர் சாண்டல்' சோப் நிறுவனம் துவங்கப்பட்டு, 108 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, சோப்பின் வரலாறு தொடர்பான ஆல்பத்தை நடிகை தமன்னா, கர்நாடக காங்., அரசின் தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், அத்துறையின் முதன்மை செயலர் செல்வகுமார், சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன தலைவர் அப்பாஜி நாடகவுடா உள்ளிட்டோர் வெளியிட்டனர்.






      Dinamalar
      Follow us