ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் போன் பயன்படுத்த புதிய நடைமுறை
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் போன் பயன்படுத்த புதிய நடைமுறை
UPDATED : அக் 13, 2026 06:09 PM
ADDED : அக் 13, 2026 06:07 PM

திருச்சி: திருச்சியில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், உறையூர் வெக்காளியம்மன் கோவில்களுக்குள் பாதுகாப்பு மற்றும் புனித தன்மையை பேணும் வகையில், செப்., 1ம் தேதி முதல், பக்தர்கள் மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
தற்போது, அந்த தடையை நீக்கி, சில நிபந்தனைகளுடன் போன்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள், மொபைல் போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து எடுத்துச் செல்லலாம்.
இருப்பினும், கோவிலுக்குள் போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்றும், போட்டோ, வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை செய்து, அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
