மதுரையில் புதிய ரோபோடிக் எக்ஸலென்ஸ் சென்டர் திறப்பு
மதுரையில் புதிய ரோபோடிக் எக்ஸலென்ஸ் சென்டர் திறப்பு
ADDED : மே 15, 2026 02:13 AM

மதுரை: மதுரை கே.கே.நகரில் டாக்டர் எம்.வி.ஆர்., ஆர்த்தோ மருத்துவமனையின் புதிய ரோபோடிக் எக்ஸலென்ஸ் சென்டர் திறப்பு விழா நேற்று நடந்தது.
கே.கே.நகரில் பிரபல டாக்டர் முத்துவேல்ராஜனால் நிறுவப்பட்ட இம்மருத்துவமனை, 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தது.
இங்கு ரோபோடிக் கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் எக்ஸலென்ஸ் சென்டரை, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திறந்து வைத்தார்.
ஏ.ஆர்.ஏ.எஸ்., குழுமத் தலைவர் சுரேஷ் கனகசபை, டாக்டர்கள் சுப்புகண்ணு, முத்துக்குமார், பாலமுரளி, அபு அப்சல், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆனந்த், சத்லோகர் சினர்ஜி நிறுவன உரிமையாளர் தியாகு உட்பட பலர் பங்கேற்றனர்.
ரோபோடிக் கருவியின் துணையோடு சிறந்த பயிற்சி பெற்ற டாக்டர்கள் மூலம் துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஏற்படும் வலி, ரத்த இழப்பு, தொற்று அபாயம், பக்க விளைவுகள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் காலம் குறைவு. அறுவை சிகிச்சைக்கு முன் சி.டி., ஸ்கேன் தேவையில்லை. இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப உதவுகிறது. செயற்கை நுண்ணறிவுடன், மனித நுண்ணறிவை இணைத்து துல்லியமான முடிவுகளை ரோபோடிக் அறுவை சிகிச்சை உறுதி செய்கிறது.விவரங்களுக்கு: 96003 44030.
