உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 20, 2026 04:30 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்தின், சில்லரை மதுக்கடைகளில், 20,000க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, புதிய சீருடை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு, வெளிர் நீல நிறத்தில் சட்டை மற்றும் அடர் நீல நிறத்தில் பேன்ட் வழங்கப்பட உள்ளது. அதே போல், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு, வெளிர் பழுப்பு நிற சட்டையும், அடர் சாம்பல் நிற பேன்ட்டும் வழங்கப்பட உள்ளது. இதற்கான மாதிரி புகைப்படத்தை, டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டது. நவ., 15 முதல் புதிய சீருடை அமலுக்கு வரும் என, கூறப்படுகிறது.
