ADDED : ஏப் 01, 2026 03:04 AM
சென்னை: தேர்தல் கமிஷனால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட, குரூப் - 1 போலீஸ் அதிகாரிகளான ஜோஸ் தங்கையா உள்ளிட்ட எட்டு எஸ்.பி.,க்களுக்கு பணியிடம் ஒதுக்கி, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
எட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்களை, தேர்தல் கமிஷன் சமீபத்தில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அவர்கள் அனைவரும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, பதவி உயர்வு வழியே எஸ்.பி.,யானவர்கள். அவர்களுக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இது குறித்து, நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
கண்ணன் எஸ்.பி., விருதுநகர் துணை கமிஷனர், காவலர் நலன், சென்னை மாநகர போலீஸ்.
பாலகிருஷ்ணன் எஸ்.பி., நாகை துணை கமிஷனர், தலைமையிடம், சென்னை மாநகர போலீஸ்.
ஜோஸ் தங்கையா எஸ்.பி., கரூர் துணை கமிஷனர், பாதுகாப்பு பிரிவு, சென்னை மாநகர போலீஸ்.
சுஜாதா எஸ்.பி., ஈரோடு எஸ்.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு, சென்னை.
சண்முகம் எஸ்.பி., காஞ்சிபுரம் எஸ்.பி., கியூ பிரிவு, சென்னை.
ராஜாராம் எஸ்.பி., தஞ்சாவூர் எஸ்.பி., லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை.
மாதவன் எஸ்.பி., தென்காசி எஸ்.பி., - சி.பி.சி.ஐ.டி., சென்னை.
அனிதா எஸ்.பி., பெரம்பலுார் எஸ்.பி., நவீனமயமாக்கல், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை.
***
