ADDED : ஜன 02, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், 45 துாய்மை பணியாளர்கள், இரவுக் காவலர் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, மருத்துவமனை தலைமை டாக்டர்கள் அன்பழகன் தலைமையில், டாக்டர்கள் சீனிவாசன், சரவணன், தலைமை செவிலியர் வசுமதி, தலைமை மருந்தாளுனர் நெடுஞ்செழியன் ஆகியோர் துாய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து, புத்தாண்டை கொண்டாடினர்.
துாய்மை பணியாளர்களும், டாக்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.